வலிகள் தந்த வாரம்! முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!

இந்தச் செய்தியின் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
”வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!”
” உரிமைக்காய் குரல் கொடுப்போம்!”
”நீதிக்காய் போராடுவோம்!”
”உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை!”
தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்!”
என கைகளினால் வரையப்பட்ட சுவரொட்டிகள் இங்கு பரலாக ஒட்டப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மரங்கள், சுவர்கள் எங்கும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்தச் சுவரொட்டிகளின் கீழே ”பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்” எனவும் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்துகொண்ட பாதுகாப்புத் தரப்பினர் சர்ச்சையை ஏற்படுத்திய சுவரொட்டிகளை உடனடியாக அகற்றியதுடன், இறுதி யுத்தத்தின் மூன்றாண்டு நிறைவையொட்டி உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மாணவர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிகள் தந்த வாரம்! முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!
Reviewed by NEWMANNAR
on
May 17, 2012
Rating:

No comments:
Post a Comment