அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச சபையில் மக்கள் கலரி அமைக்க கோரிக்கை

முசலி பிரதேச சபையில் மக்கள் கலரி அமைக்க மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் திட்ட இணைப்பாளரும் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளருமான அ.சுனேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் முசலி பிரதேச சபையின் தலைவரிடம் இன்று புதன்கிழமை கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை கையளித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''முசலி பிரதேசத்தில் இயங்கி வரும் பிரஜைகள் குழு, பிரதேச சபையின் அனுமதியுடன் முசலி பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மற்றும் மாதாந்த பிரஜைகளுக்கான கூட்டம், கிராம மட்டத்திலான கலந்துரையாடல்கள் என்பனவற்றை தொடர்ந்தும் நடாத்தி வருகின்றது.

அத்தோடு பிரஜைகள் குழு சார்பாக முசலி பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் உறுப்பினர்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளோம். இந்த நிலையில் மக்கள் கலரி அமைப்பது பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். கடைசியாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் கூட மக்களால் இதைபற்றி வினவப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளை மாதத்தில் ஒரு தடவையாவது உரிய பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி பிரஜைகள் குழுவிடம் கேட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக கொண்டு மக்கள் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறவும் மக்களுக்கும் பிரதேச சபை மற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்பாடலை அதிகரிக்கவும் இந்த மக்கள் கலரி மிகவும் ஒரு முக்கியமானதொரு விடயமாக காணப்படுகின்றது. 

எனவே முசலி பிரதேச சபையில் மக்கள் கலரியை ஏற்படுத்தி தருமாறு பிரஜைகள் குழு சார்பாகவும் பிரதேச மக்கள் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்".
முசலி பிரதேச சபையில் மக்கள் கலரி அமைக்க கோரிக்கை Reviewed by Admin on May 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.