அண்மைய செய்திகள்

recent
-

கொண்டாச்சிக்குடா கிராமத்திற்கான போக்குவரத்து சீரின்மை

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சிக்குடா கிராமத்திற்கான போக்குவரத்து சேவை சீரின்மை தொடர்பாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் கடிதமொன்றை முசலி பிரதேச பிரஜைகள் குழு சமர்ப்பித்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவர் எம்.சறோ ரூபன் குரூஸ் தெரிவித்தார்.


மன்னாரில் இருந்து அரிப்பிற்கு செல்லும் அரச பேரூந்து வழமையாக கொக்குப்படையான் கிராமத்திற்குச் சென்று அதன் பின்னரே அரிப்பு கிராமத்திற்கு செல்கின்றது. இருப்பினும் சில வேளைகளில் பயணிகள் சிலாவத்துறை சந்தியில் இறக்கிவிடப்படுவதுடன், பஸ் கொண்டச்சிகுடாவுக்குச் செல்லாதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் ஆகியோர் பல கிலோமீற்றர் தூரம் தங்களது இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. 

எனவே, இம்மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் சீரான போக்குவரத்துச் சேவையை மேற்கொள்ளுமாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொண்டாச்சிக்குடா கிராமத்திற்கான போக்குவரத்து சீரின்மை Reviewed by Admin on May 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.