அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

நானாட்டான் விபத்தில் நானாட்டான் பிரதேச சபையின் அரச தரப்பு உறுப்பினர் உற்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் அரச தரப்பு உறுப்பினர் பயணம் செய்த ஜீப் வாகனம் நேற்று திங்கட்கிழமை காலை கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேரூம் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நானாட்டான்- அரிப்பு பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது படுகாயமடைந்த நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் மொஹமட் சகாப்தீன் அவருடைய மனைவி மற்றும் மைத்துனி ஆகிய மூன்று பேருமே படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர் மொஹமட் சகாப்தீன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு இவரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக மன்னார் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ் விபத்து குறித்த விசாரனைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்! Reviewed by NEWMANNAR on May 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.