சிறையில் உள்ள தமிழ் உறவுகளின் உண்ணா விரதம் தொடர்கின்றது

அரசியல் கைதிகள் இன்று (22) ஆறாவது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
இவர்களில் மூன்று கைதிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
கொழும்பு விளக்கமறியல் சிறையில் 179 தமிழ் அரசியல் கைதிகளும், வவுனியா சிறையில் 33 கைதிகளும், களுத்துறை சிலைறியில் 22 கைதிகளும் மொத்தமாக 234 கைதிகள் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டதைப் போல் அல்லாமல் தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென அரசியல் கைதிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, சிறைச்சாலைகள் அமைச்சின் ஏற்பாட்டில் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்டக் கூட்டம் ஒன்று இன்று (22) நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
சிறையில் உள்ள தமிழ் உறவுகளின் உண்ணா விரதம் தொடர்கின்றது
Reviewed by NEWMANNAR
on
May 22, 2012
Rating:

No comments:
Post a Comment