மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியளாலரான எம்.ஏ.காதரை, அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தெரிவத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இறை வழிபாடும்,கண்டன நிகழ்வும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட சமூக ஆர்வலரும்,சர்வமத அமைப்பின் உறுப்பினரும், மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியளாலருமான எம்.ஏ.காதர், முஸ்ஸிம் பிரதிநிதியாக கலந்து கொண்டு மன்னார் ஆயருக்கு சார்பாக உரையாற்றியதோடு தமிழ் - முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமை தொடர்பிலும் உறையாற்றினர்.
இந்த நிலையில், நேற்று மாலை 5.10 மணியளவில் ஊடகவியலாளர் மக்கள் காதர், தனது வீட்டில் இருந்து பஸார் பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்நந்து வந்த அமைச்சர் றிஸாட் பதியூதீனின் இணைப்பாளர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய பின் தப்பிச் சென்றுள்ளார்.
ஊடகவியலாளர் மக்கள் காதர், மன்னார் மாவட்டத்தில் தமிழ் - முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமையினை தொடர்ந்தும் வழியுறுத்தி வருகின்றார். அத்துடன் மீள் குடியேற்றப்படாத தமிழ் - முஸ்ஸிம் மக்கள் மீண்டும் தமது சொந்த மண்ணில் நீதியான முறையில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல தரப்பினரிடம் முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் மீதான தாக்குதல் மீண்டும் ஒரு அராஜக அரசியலை காட்டுகின்றது.
எனவே, ஊடகவியலாளர் மக்கள் காதர் மீதான தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
May 29, 2012
Rating:

No comments:
Post a Comment