வவுனியாவில் மக்கள் உறவுகளுக்கு அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுட்டிக்கப்பட்டது. வன்னி யுத்தத்தில் உறவுகளை இழந்த பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், உட்பட இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை பலிகொடுத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றுகாலை இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தமக்களுக்கான மௌன பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் அவர்கள் நினைவாக மலர் அஞ்சலியினையும் செலுத்தினர்.
வவுனியாவில் மக்கள் உறவுகளுக்கு அஞ்சலி!
Reviewed by Admin
on
May 18, 2012
Rating:

No comments:
Post a Comment