இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் படுகாயம்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், இன்று காலை இனந்தெரியாத குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரான தர்ஷானந்த் இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது, கலட்டிச் சந்திக்கருகில் மறித்த குழு ஒன்று இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரான தர்ஷானந்த் இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது, கலட்டிச் சந்திக்கருகில் மறித்த குழு ஒன்று இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளது.
இதன்போது தலையில் கடும் காயத்திற்கு உள்ளாகி இரத்தக்கசிவுடன் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது பொது மக்களையும் பல்கலை மாணவர்களையும் அச்சுறுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
May 18, 2012
Rating:

No comments:
Post a Comment