அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 45 ஏக்கர் தனியார் காணியை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி:


'மன்னார் சௌத்பார் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளரினால் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தமிழ் தேசியக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



மேற்படி 45 ஏக்கர் வெற்றுக்காணியில் இராணுவத்தினர் கடந்த 10 தினங்களுக்கு மேலாக காவலரன் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணியின் உரிமையாளரை அக்காணிக்குள் செல்ல இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் என அவர் கூறினார்'

குறித்த காணியின் உரிமையாளர் சகல ஆவணங்களுடனும் தன்னிடம் வந்து இவ்விடயம் தொடர்பில் முறையிட்டமையினை தொடர்ந்தே இவ்விடயம் தொடர்பில் தான் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் 45 ஏக்கர் தனியார் காணியை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி: Reviewed by Admin on June 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.