அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!


போர்க்காலத்தில் தொழில்களைக் கைவிட்டு மீன்பிடி உபகரணங்களை இழந்த மன்னார் மாவட்ட மீன்வர்களுக்கு இந்திய அரசால் நிவாரணமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் வள்ளங்கள், வலைத்தொகுதிகள் உள்ளிட்டவைகளை அம்மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, தமது வாழ்வாதாரங்களைத் தொலைத்த மீனவர்களுக்கு மட்டுமே கையளிக்கப்பட வேண்டும் என வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வங்காலை, பேசாலை, தலைமன்னார் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200இற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் தமது குடும்பங்களுடன் தமது தொழில் வள்ளங்களிலேயே ஏனைய உபகரணங்களையும் தம்முடனேயே எடுத்துக்கொண்டு தமிழக கரையோரங்களில் குறிப்பாக இராமேஸ்வரம் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களான வள்ளங்கள் வலைகள் முதலியவை அங்குள்ள அரச நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப் பட்டதன் பின்னர், அவை பழுதடையும் நிலையில் காணபப்ட்டதால் அவற்றினை அங்குள்ள மீனவர்களின் உபயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இம்மீனவக் குடும்பங்கள் நாடு திரும்பிய பின்னர் அப்போது இங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோது அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க, பாதிக்கப்பட்ட மன்னார் மீனவர்களுக்கு தற்போது இந்திய அரசால் இரண்டு மீனவர்களுக்குத் தலா ஒரு 19அடி வள்ளம், 15குதிரைவலு என்ஜின், 12 வலைகள் கொண்ட தொகுதி என்ற அடிப்படையில், 175 வள்ளங்கள் மற்றும் வலைகள் வழங்கப்படவுள்ளன. இவற்றுக்கான பயனாளிகளாக மன்னார் மாவட்ட மீனவ சமாசங்கள் மற்றும் மீன்பிடித் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலிலுள்ளோர் விலக்கப்பட்டு, இம்மாவட்ட அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால் எவ்வகையிலும் தகுதியற்றவர்களின் பெயர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கே இவ்வுபகரணங்கள் வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
ஏற்கனவே, இந்திய அரசால் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுககென வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் பல முறைகேடான விதத்தில் வேறிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவ்வாறே, தற்போது வழங்கப்படவுள்ள மீன்பிடி வள்ளங்கள், வலைகள் உண்மையாகவே போரினால் பாதிக்கப்பட்டு தமது வள்ளங்கள், உடைமைகளைத் தமிழ் நாட்டில் விட்டுவந்த வங்காலை, பேசாலை, தலைமன்னாரைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்! Reviewed by NEWMANNAR on June 12, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.