அரச பஸ் தரிப்பிடத்தில் குற்றச் செயல் இடம்பெறும் பயணிகள் தரிப்பிடத்தின் மறைப்பு பகுதிகள் உடைப்பு-மன்னார் நகரசபை நடவடிக்கை
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள பயணிகள் தரிப்பிடத்தில் மறைப்பாக காணப்பட்ட பகுதிகளை மன்னார் நகரசபை அகற்றியுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மறைவான சுற்று சுவர்களை கொண்டுள்ள பயணிகள் தரிப்பிடத்தினுள் தொடர்ந்து குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக மன்னார் நகர சபைக்கு தொடர்ந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டதினைத் தொடர்ந்து மன்னார் நகர சபை குறித்த பயணிகள் தரிப்பிடத்தில் உள்ள மறைப்பை ஏற்படுத்தக்கூடிய சுவர் பகுதியை அகற்றியுள்ளது.
அண்மைக்கலமாக குறித்த தரிப்பிடத்தினுள் போதைப்பொருள் பாவனை மற்றும் இரவு நேரங்களில் சமூகச் சீர் கேடுகள் என்பன இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் மன்னார் நகர சபை குறித்த பிரச்சினைகளை தொடர்ந்து ஆராய்ந்து பார்த்த நிலையில் குறித்த மறைப்புச் சுவர் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.
-
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மறைவான சுற்று சுவர்களை கொண்டுள்ள பயணிகள் தரிப்பிடத்தினுள் தொடர்ந்து குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக மன்னார் நகர சபைக்கு தொடர்ந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டதினைத் தொடர்ந்து மன்னார் நகர சபை குறித்த பயணிகள் தரிப்பிடத்தில் உள்ள மறைப்பை ஏற்படுத்தக்கூடிய சுவர் பகுதியை அகற்றியுள்ளது.
அண்மைக்கலமாக குறித்த தரிப்பிடத்தினுள் போதைப்பொருள் பாவனை மற்றும் இரவு நேரங்களில் சமூகச் சீர் கேடுகள் என்பன இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் மன்னார் நகர சபை குறித்த பிரச்சினைகளை தொடர்ந்து ஆராய்ந்து பார்த்த நிலையில் குறித்த மறைப்புச் சுவர் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.
-
அரச பஸ் தரிப்பிடத்தில் குற்றச் செயல் இடம்பெறும் பயணிகள் தரிப்பிடத்தின் மறைப்பு பகுதிகள் உடைப்பு-மன்னார் நகரசபை நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
June 12, 2012
Rating:
No comments:
Post a Comment