அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீன் பிடி உபகரணங்கள் வழங்கும் தெரிவில் முறைகேடு..செல்வம் அடைக்கலநாதன்


மன்னார் மாவட்டத்தில் கடந்த யுத்த அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள மீன் பிடி படகுகள் மற்றும் வெளி இணைப்பு இயந்திரங்கள் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கண்ணாடியிழை படகுகள், மற்றும் அதற்கான வெளி இணைப்பு இயந்திரம், வலைகள் ஆகியவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் இயங்கும் சுமார் 40 மீனவ கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் வாழும் மீனவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

எனினும் குறித்த பெயர் பட்டியல் பல்வேறு மோசடிகள் இடம்பெற்ற நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த பெயர் பட்டியலில் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவு செய்யப்படாத நிலையில் முறைகேடான முறையில் குறித்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளமை குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளமையினை தொடர்ந்து தான் இவ்விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
இந்திய மீன் பிடி உபகரணங்கள் வழங்கும் தெரிவில் முறைகேடு..செல்வம் அடைக்கலநாதன் Reviewed by Admin on June 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.