அண்மைய செய்திகள்

recent
-

படகுகள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: சுமந்திரன் _


மன்னாரில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கென இந்திய அரசினால் வழங்கப்பட்ட படகுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாது அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.


பயணாளிகள் இனங்காணப்பட்டனர். பட்டியலிடவும்பட்டது எனினும் இறுதி நேரத்தில் அந்த பட்டியல் வாபஸ் பெறப்பட்டு குறித்த அமைச்சின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.


வரவு செலவுத் திட்டத்திற்கான செயற்குழுவை அமைக்க வேண்டும் என்று ஆளும் கட்சியின் எம்.பியான திலக்க சுமத்திபால முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

வரவு செலவுத் திட்ட மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் குழுக்களை அமைத்து ஆராய வேண்டும்.அதன் மூலமாக வினைத்திறன்மிக்க செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும்.

வரவு செலவு திட்டத்தை குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் அக்குழுவினால் ஆராயப்படல் வேண்டும். இது ஒரு நல்ல யோசனையாகும்.

அதேபோல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்களும் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவை உரியவர்களை சென்றடைகின்றதா? என்பது தான் பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் உரிய பயனாளிகளுக்கு சென்றடைந்ததா? அன்பளிப்பாக வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்கள் உரியவர்களை சென்றடைந்ததா? அவ்வாறான அன்பளிப்பு பொருட்களுக்கு என்ன நடந்தது? அவையாவும் யாருக்கு விநியோகிக்கப்பட்டன என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்திய அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு டோலர் படகுகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. பயன் பெறுவார் இனங்காணப்பட்டனர். பயனாளிகளும் பட்டியலிடப்பட்டனர். ஆனால் இறுதியில் அந்த பட்டியல் வாபஸ் பெறப்பட்டு குறிப்பிட்ட அமைச்சின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வரவு செலவுத் திட்டம், அபிவிருத்தி தொடர்பில் நிச்சயமாக கலந்துரையாட வேண்டும். அதன் ஊடாகவே வினைத்திறனை எதிர்பார்க்க முடியும். மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அதனைவிடுத்து அதிகாரம், செல்வாக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்ககூடாது என்றார். ___
படகுகள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: சுமந்திரன் _ Reviewed by Admin on June 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.