அண்மைய செய்திகள்

recent
-

அல்ஹாஜ் நுர்தீன் மசூர் அவர்களின் சுயசரிதை இருவெட்டுக்கள் வெளியீடு

வன்னி மக்களின் ஆதரவு பெற்ற  மைந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்,
முன்னாள் புனர்வாழ்வு அமைச்சர், சமூக சேவையாளர் மற்றும்
பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாமனிதர்
மர்ஹும் அல்ஹாஜ் நு{ர்தீன் மசூருடைய வாழ்க்கைச் சரிதை
ஒரு குறுந் திரைப்பட விவரணச் சித்திரமாக SHA MOBILESநிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு
வெகு விரைவில் இருவெட்டுக்களாக வெளியிடப்படவுள்ளது.


மர்ஹும் அல்ஹாஜ் நு{ர்தீன் மசூர் அவர்களுடைய பெற்றோர், குழந்தைப் பருவம், பாடசாலை வாழ்க்கை,
கலாசாலைப் பட்டப்படிப்பு, இளமைப் பருவம், திருமண பந்தம், தகப்பன் அந்தஸ்த்து, தொழில் அதிபர்,
வடமாகாண முஸ்லிம்கள் அகதிளானபோது தனது அளப்பரிய சேவை, அரசியலில் காலடி பதித்தல், பாராளுமன்றம் செல்லுதல்,
அமைச்சுப் பதவி ஏற்றல், வன்னி மக்களுக்கு இன, மத, மொழி வேறுபாடின்றி பற்பல சேவைகள் செய்தல்
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியுடன் தனது 48ஆவது வயதில் திடீர் மரணம் சம்பவித்தல் போன்ற
சுமார் 500 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட வீடியோக் காட்சிகளிலிருந்தும் மற்றும் புகைப்படங்களிலிருந்தும்
வெறும் 48 நிமிட நேர வீடியோக் காட்சிகளாக மாற்றி மிகவும் அற்புதமான முறையில் தயாரிக்கப்பட்டு
இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படவுள்ளது.

தயாரிப்பு, இயக்கம், எடிட்டிங், கெமரா, வசனம் போன்ற சகல தொழில்நுட்பங்களையும்
மர்ஹும் அல்ஹாஜ் நு{ர்தீன் மசூர் அவர்களுடைய முன்னாள் ஊடகசெயலாளரும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் புஃஎருக்கலம்பிட்டி டீ கிளையின் செயலாளருமான
ஆ.து. சாஹீன் ரிசா நெறிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவெட்டை (CD) இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பும் வன்னி மாவட்ட மக்கள் மட்டும்.
தனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்றவற்றை
எதிர்வரும் 17ம் திகதி ஞாயிறு தினத்தன்றும் மற்றும் 24ம் திகதி ஞாயிறு தினத்தன்றும்
0715513063 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் (sms) அனுப்பும்படி SHA MOBILES நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறிப்பு... குறிப்பிட்ட இருதினங்கள் மட்டும் sms பண்ணவும்

மேலதிக தொடர்புகளுக்கு

M.J. SHAHEEN REZA,
Main Street,
Erukkalampiddy -04.
T.P : 0716228222 / 0770757775.
அல்ஹாஜ் நுர்தீன் மசூர் அவர்களின் சுயசரிதை இருவெட்டுக்கள் வெளியீடு Reviewed by Admin on June 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.