வன்னியில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
வன்னியில் மரக்கறிகளின் விலை, சடுதியாக அதிகரித்துள்ளன. கடந்த சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியின் போது மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து அதன் உற்பத்தியை விவசாயிகள் நிறுத்திக்கொண்டதாலேயே தற்போது வன்னியில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மரக்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவும் தற்போதை மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் என வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அந்தவகையில், லீக்ஸ் ஒரு கிலோ 200 ரூபாவாகவும், சின்ன வெங்காயம் 180 ரூபாவாகவும், பச்சை மிளகாய் - 240/=, தக்காளி – 180/=, முருங்காய் - 140/=, கிழங்கு - 160/=, கத்தரிக்காய் - 60/=, வெண்டிக்காய் - 90/= என்ற விலைகளில் வன்னியில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேற்படி விலை குறிப்பிட்ட மரக்கறிகள் அனைத்தும் சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் 100 ரூபா விலையிலும் குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
June 13, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment