புதிய இசட் புள்ளிகளால் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்த மாணவர்கள்பலர் ஏமாற்றம் _
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிய இசட் புள்ளிகள் வெளியிடப்பட்ட நிலையில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என எதிர் பார்த்திருந்த பலர் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்தாண்டு இடம் பெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு பழைய பாடத்திட்டம் ,புதிய பாடத்திட்டத்தின் கீழ மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய போதிலும் இரு பரீட்சைகளினதும் இசட் புள்ளிகள் கணிபீடு ஒரே மாதிரியாக மேற் கொள்ளப்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்படட மாணவர்களின் சார்பில் பெற்றோர்களினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பிட்ட இசட் புள்ளி விவகாரத்தை மீளாய்வு செய்யும் படி தீர்ப்பளிக்கப்பட்டது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற இன்னும் இரண்டு வார காலம் இருக்கும் நிலையில் கடந்தாண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் புதியஇசட் புள்ளிகள் நேற்று முன்தினம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுளள்து.
இதன் காரணமாக பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட பழைய பாடத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக அனுமதியை எதிர் பார்த்து இருந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளர்கள்.
இத்துடன் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த பலர் இந்த புதிய இசட் புள்ளி வெளியிடப்பட்டதினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இத்துடன் இவர்கள் தாம் எதிர்பார்த்த மருத்துவம், பொறியியல் உட்பட ஏனைய பீடங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மீண்டும் பரீட்சைக்கு விண்ணப்பிக்காது விட்டமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
புதிய இசட் புள்ளிகளால் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்த மாணவர்கள்பலர் ஏமாற்றம் _
Reviewed by NEWMANNAR
on
July 24, 2012
Rating:

No comments:
Post a Comment