நானாட்டான் அருள்மிகு அகோர விகார செல்வ முத்துமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள்.
ஈழமணித் திருநாட்டின் வடபால் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் எனும் கிராமத்தில் அகோர விகார செல்வ முத்துமாரியாக பல்லாண்டு காலமாக திருவருள் புரியும் அன்னைக்கும் பரிவார தெய்வங்களுக்கும் திருவருள் துணையுடன் நந்தன வருஷம் உத்தராயணம் முதுவேனிற்காலம் ஆனிமாதம் 21ம் நாள் (05.07.2012) வியாழக்கிழமை அன்று மஹா கும்பாபிஷேக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மண்டலாபிNஷக நிகழ்வுகள் 06.07.2012 முதல் 18.07.2012 வரை நடைபெறுகின்றது. 17.07.2012 அன்று செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேக நிகழ்வு நடைபெறுவதுடன் மாலை தீர்த்த செம்பு சாளம்பன் பிள்ளையார் கோவிலிலிருந்து எடுத்துவரப்படும். தொடர்ந்து திருவூஞ்சல் நிகழ்வும் தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெறும்.
இறுதிநாள் நிகழ்வுகள் 18.07.2012 புதன்கிழமையன்று மாலை 16.00 மணிக்கு இடம்பெறும் வைரவர் சாந்தி உற்சவத்துடன் நிறைவுறும். இக் கும்பாபிஷேகக் கிரியைகள் 'குருவம்ச சிகாமணி' சிவஹீ சோ. வாகீஸ்வரக்குருக்கள் (ஊரெழு கிளானைப்பதி மனோன்மணி அம்பாள் ஆலய பிரதம குரு) தலைமையில் நடைபெறுகின்றன.
வி ஆர்.
நானாட்டான் அருள்மிகு அகோர விகார செல்வ முத்துமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள்.
Reviewed by NEWMANNAR
on
July 12, 2012
Rating:
No comments:
Post a Comment