அண்மைய செய்திகள்

recent
-

வட, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயபப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம்

வடக்கு, கிழக்கில் மாகாணங்களிலுள்ள காணிகளின் விபரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்து மூலம் உறுதியளித்தது.

இதனையடுத்து, இந்த சுற்றுநிருபத்தை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்திருந்த மனுதாரரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த வழக்கை விலக்கிக்கொள்ள நீதிமன்றில் இணக்கம் தெரிவித்தார்.

மேற்படி வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, திபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சம்பந்தப்பட்ட சுற்று நிருபத்தை விலக்கிக் கொள்வது பற்றிய அரசின் முடிவை அரசு சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யுவன்ஜன் விஜேதிலக எழுத்தில் சமர்ப்பித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் மேற்படி சுற்றுநிருபம் 2010 ஆம் ஆண்டு காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து , து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இப்பதிவுகள் தொடர்பில் பிணக்குகள் எழும் போது அது குறித்து விசாரித்து, காணி உரிமையாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட பிரதேச அரச அதிகாரிகள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் போன்றோரைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைக்கவும் இந்த சுற்றுநிருபத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த வருடமே பூர்வாங்க விசாரணை செய்த பின்னர் சுற்றுநிருபத்தினால் விதிக்கப்பட்ட காலக்கெடு பற்றிய ஏற்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த மனு நேற்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர் மனுதாhர்களான காணி அமைச்சர், காணி ஆணையாளர் நாயகம், வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் காணி ஆணையாளர்கள் போன்றவர்களின் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் யுவன்ஜன் விஜேதிலக மேற்படி சுற்றுநிருபத்தை முற்றாக விலக்கிக் கொள்ள அரசு தயார் என எழுத்தில் உறுதி தெரிவித்தார்.

இதனையடுத்து, தேவை எழுந்தால் இதுபோன்ற ஒரு வழக்கை மீண்டும் தாக்கல் செய்வதற்கான தமது உரிமையை பதிவு செய்து கொண்டு வழக்கை விலக்கிக்கொள்ள மனுதாரர் தயார் என மனுதாhர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் விரான் கொரயா, பவானி பொன்சேகா, ஷெகான் குணதிலக ஆகியோரின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆஜரானார்,
வட, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயபப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம் Reviewed by NEWMANNAR on July 12, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.