அண்மைய செய்திகள்

recent
-

தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில் சட்டத்தரணிகள்


மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று திங்கட்கிழமையும் தொடர்ந்து இடம் பெறுவதினால் மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.


கடந்த 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரியும் மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற சட்டத்தரணிகள் கடந்த 19 ஆம் திகதி முதல்(19-07-2012) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் 8 ஆவது நாளாக இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்ந்துள்ளது.

இன்று அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து பல கைதிகள் மன்னார் நீதிமன்றத்திற்கு தவணைக்காக அழைத்துவரப்பட்டு மீண்டும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை பல்வேறுபட்ட வழக்கு விசாரனைகளுக்காக இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு வந்த நூற்றுக்கணக்கானவர்கள் திரும்பிச்சென்றுள்ளனர். ___

தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில் சட்டத்தரணிகள் Reviewed by NEWMANNAR on July 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.