யாழ், வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தல் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம்
யாழ்ப்பாணம், வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தல் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இரு அமர்வுகளாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
காலை 9மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது அமர்வில் 2005-2007, 2006-2008 ஆம் கல்வி ஆண்டுகளில் கற்பித்தல் தேசிய டிப்ளோமா பாடங்களை பயின்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாவது அமர்வில் 2007/2009, 2008/2010 ஆம் கல்வி ஆண்டுகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடங்களை பயின்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன் அறிவித்துள்ளார்.
யாழ், வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தல் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம்
Reviewed by NEWMANNAR
on
July 30, 2012
Rating:

No comments:
Post a Comment