மன்னார் ஆயரை அச்சுறுத்தியோர் இன்று நீதிபதியையும் மிரட்டுகின்றனர்-ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தன
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்னார் ஆயரை அச்சுறுத்தியவர்கள் இன்று மன்னார் நீதிபதியையும் மிரட்டுகின்றனரெனக் குற்றம்சாட்டிய ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தன, இவர்கள் நாட்டில் வன்முறை அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கின்றனர் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற கடல்சார் தீழ்ப்பு தடைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜயலத் ஜயவர்தன எம்.பி. மேலும் கூறியதாவது;
இன்று கடலை விட இந்த சமூகம் தான் மோசமாக மாசடைந்துள்ளது. எனவே சமூகத்தைத்தான் முதலில் சுத்தப்படுத்த வேண்டும். இன்று மன்னாரில் மீனவர்கள் மட்டுமன்றி அரசியல் பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றும் மன்னார் ஆயர் கூட அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டப்படுகின்றார். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆயரை மிரட்டியவர்கள் இன்று மன்னார் நீதிபதியையும் மிரட்டுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்வதற்குக் கூட அனுமதி வழங்காதளவுக்கு இந்த சமூகம் மாசடைந்துள்ளது. ஒவ்வொருவரின் தலையிலும் இடிவிழும் வகையிலேயே அநியாயங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. விபசாரம், சட்டவிரோத மசாஜ் நிலையங்கள், தாராளமாக செயற்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கோ தடை செய்வதற்கோ பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே கடலை விட இந்த சமூகம்தான் மாசடைந்துள்ளது. அதனைத்தான் முதலில் துப்புரவாக்க வேண்டும்.

Reviewed by NEWMANNAR
on
July 20, 2012
Rating:

No comments:
Post a Comment