அரசுக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பம்!
தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கு எதிராக மன்னாரில் அரசு மற்றும் படையினருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் சற்று முன்னர் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் ஆரம்பமாகியது.
மன்னாரில் கடற்படையினரால் கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடைமுறை மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட முறையில் அரச தரப்பு மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மன்னார் பேரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் இன்று காலை ஆரம்பமான இப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலருடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பம்!
Reviewed by Admin
on
July 07, 2012
Rating:

No comments:
Post a Comment