அண்மைய செய்திகள்

recent
-

பதக்கம் வென்ற மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலை மாணவன்-படங்கள் இணைப்பு

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் பல பதக்கங்களைப் பெற்று தாமும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துவருகின்றனர்.
அந்த வகையில் மன்னார் வலயத்தின் நானாட்டான் கோட்டத்தின் கீழ் அடங்கும் பாடசாலைகளில்
ஒன்றான மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையைச் சேர்ந்த
செ.பிரியதர்சன் எனும் மாணவன் 15 வயதின் கீழ் அண்களுக்கான பிரிவில் ஈட்டி எறிதல் நிகழ்வில் மாகாணமட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதுடன் தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.





தமது வெற்றிக்கு அயராது உழைத்த பிரத்தியேக பயிற்றுவிப்பாளர்களையும் இவர்களை ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர் திரு. A.Q.J. பெர்ணாட்ன்டோ அவர்களையும் உறுதுணையாக இருந்த ஏனைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் மற்றும் தனது பெற்றோர்களையும் நன்றியுடன் நினைவு கூருவதாகவும் தெரிவித்தார்.

இவரும் இவருடைய சகோதரரான செ.செல்வதர்சனும் இரட்டையர்கள் என்பதடன் இவர்கள் இருவரும் மாகாண மட்டப் போட்டிகளுக்காகச் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பதக்கம் வென்ற மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலை மாணவன்-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on July 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.