அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் அருள்மிகு அகோர விகார செல்லமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு


17.7.2012 அன்று காலை 07.00 மணியளவில் விநாயகர் பூசையுடன் ஆரம்பித்த கிரியைகளைத் தொடர்ந்து அடியார்கள் சாளம்பன் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று தம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பக்தர்கள் புடை சூழ பாற்செம்பு எடுத்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து நானாட்டான் பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னைக்கும் பரிவார தெய்வங்களுக்கும் (1008) சங்காபிNஷக பூஜை வழிபாடுகளுடன் தீர்த்தோற்சவ கிரியைகளும் இடம்பெற்றன.


அன்றைய தினம் மாலை திருஊஞ்சல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இத் தீமிதிப்பு நிகழ்விற்கென அமைக்கப்பட்ட தீ மேடை சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிகமான மணித்துளிகள் தயார்ப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. அன்னையின் அருளினால் இடம்பெறும் இவ் நிகழ்வுகளைக் காண பெருமளவிலான பக்தர்கள் ஆலய முன்றிலில் கூடியிருந்தார்கள்.





திருவூஞ்சல் பாடல்கள் முடிந்ததும் விNஷட தவில் நாதஸ்வரக் கச்சேரிகளுடன் அன்னையின் அருட்பார்வையின் முன்னால் பக்தர்கள் தீக்குளிப்பதற்கு ஆயத்தமானார்கள். அன்னையின் மேல் கொண்ட அதீத பக்தியால் பக்தர்கள் இத் தீ மேடையிலே மிகச் சாதாரணமாக் தமது வேண்டுதல்களின் பொருட்டு நடந்து சென்றதைக் காணமுடிந்தது. ஆண்கள் , பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இவ்வாறு தமது நேர்த்திகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

-வி ஆர். -
நானாட்டான் அருள்மிகு அகோர விகார செல்லமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on July 19, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.