மடுத்திருப்பதியின் ஆவணிப் பெருவிழா-2012
உலகின் முக்கிய மரியன்னைத் திருத்தலங்களுக்குள் ஒன்றான மடு அன்னைத் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான ஆவணி 15ஆம் திகதி திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்ட ஊடகத்துறைப் பொறுப்பாளரான தமிழ் நேசன் அடிகளார் மடு ஆவணித் திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
மடுத்திருப்பதியின் ஆவணித் திருவிழா இம்மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆவணி 15ஆம் திகதி (புதன் கிழமை) மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருவிழா ஆகும். அன்றைய தினம் காலை 6.20 மணிக்கு இடம்பெறும் பெருவிழாத் திருப்பலியானது தமிழ், சிங்களம், ஆங்கிலம், இலத்தீன் ஆகிய மொழிகள் இணைந்தாக ஒப்புக்கொடுக்கப்படும்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை தலைமையில் இடம்பெறும் திருவிழாத் திருப்பலியில் கண்டி மறைமாட்ட ஆயர் மேதகு வியான்னி பெனாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுர மறைமாவட்ட ஆயர் மேதகு நோபேட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு மக்ஸ்வெல் சில்வா ஆண்டகை ஆகியோரும் பங்கெடுக்கின்றனர். திருவிழாத்திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுருவப் பவனியும் திருச்சுபருப ஆசீரும் இடம்பெறும்.
திருவிழாவுக்கு முதல் நாள் ஆவணி 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணை தினமாகும். அன்றைய நாள் மாலை வழிபாடுகள் 6.15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். அன்றைய தினம் நற்கருணை ஆராதனை, மறையுரைகள் தமிழ் சிங்கள மொழிகளில் இடம்பெறும். நற்கருணைப் பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவையும் இடம்பெறும்.
15ஆம் திகதி இடம்பெறும் திருவிழாத் திருப்பலியானது இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அத்துடன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை தென்றல் அலைவரிசையிலும் சிங்கள சேவையிலும் நேரயாக அஞ்சல் செய்யப்படும்.
இது பாடசாலை விடுமுறைக் காலமாக இருப்பதனால் பெருமளவிலான யாத்திரிகர்கள் இத்திருவிழாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாண்டு மடுத்திருப்பதியின் ஆவணித் திருவிழாவுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளையும் மடுப்பரிபாலகர் அருட்திரு. எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் மேற்கொண்டுள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்போடு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை, மன்னார் மறைமாவட்டக் குருக்கள் மற்றும் ஏனைய மறைமாவட்டக்; குருக்களின் அனுசரணையில்; திருவிழா ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
மடு யாத்திரிகர்களின் வசதிக்காக, போக்குவரத்து ஒழுங்குகள், தண்ணீர் வசதிகள், சுகாதார வைத்திய சேவைகள், பாதுகாப்பு ஒழுங்குகள் போன்றன செய்யப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட குளாய்களில் குடிதண்ணீர் மற்றும் பாவனைக்கான தண்ணீர் வழங்கப்படுகின்றன. வறட்சி காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதனால் யாத்திரிகர்கள் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
மருதமடுத் திருத்தலம் ஒரு வியாபார ஸ்தலமோ அல்லது சுற்றுலாப் பகுதியோ அல்ல. பல நூற்றாண்டுகளாக ஆன்மீக மனமாற்றமும், அமைதியும் அருளும் புனிதமான திருத்தலமாகும். எனவே இத்திருத்தலத்திற்கு யாத்திரிகர்களாக வருவோர் இத்தலத்தின் புனிதத்தன்மைக்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். திருத்தலத்தின் புனிதத்திற்குப் பொருந்தாத ஆடல், பாடல், சீட்டு விளையாடுதல், இசைக்கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற கேளிக்கைகளும், மது அருந்துதலும், மது விற்றலும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன. இத்திருத்தலத்தில் கண்ணியமான நடத்தையைப் பேணும்படியாகவும், மரியாதையான ஆடைகளை அணியுமாறும் யாத்திரிகர்கள் வேண்டப்படுகின்றார்கள்.
மிதிவெடி அபாயங்கள் இன்னும் இருப்பதால் மிதிவெடி அகற்றப்;படாத காட்டுப்பகுதிக்குள் செல்வதும், மரங்களை வெட்டுவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. மடு அன்னையின் பரிந்துரையையும் ஆசியையும் வேண்டி இத்திருத்தலத்திற்கு வரும் அனைத்து மக்களும் அன்போடு வரவேற்கப்படுகின்றார்கள்.

Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:

No comments:
Post a Comment