மன்னார் வங்காலையில் தொடர் மின் வெட்டு-பாவனையாளர்கள் விசனம்.

மன்னார் மாவட்டம் முழுவதும் கடந்த அண்மை நாட்களாக மின்சார தடைகள் திடீர் திடீர் என ஏற்படுகின்றது.
இதனால் மக்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-ஆனால் மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல கிராமங்களிலும் மினசாரம் இருக்கின்ற நேரங்களில் வங்காலை கிராமத்தில் இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் மின் தடங்கள் அடிக்கடி ஏற்படுகின்றது.
-இதன் காரணமாக கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள உயர் தரப்பரிட்சைக்குத்தோற்றும் வங்காலை கிராம மாணவர்களும் தொடர்ந்தும் பாதீக்கப்பட்டு வருகின்றனர்.
-குறித்த மின் தடங்களினால் சட்டவிரோதச் செயல்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
-நீண்ட காலமாக இந்த பிரச்சினை வங்காலை கிராமத்தில் அழுலில் இருக்கின்ற போதும் மன்னார் மின்சார சபை இந்த பிரச்சினையில் மௌனம் காத்து வருவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நகர நிருபர்
மன்னார் வங்காலையில் தொடர் மின் வெட்டு-பாவனையாளர்கள் விசனம்.
Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:

No comments:
Post a Comment