4 இந்தியர்கள் பேர் மன்னாரில் கைது.
மன்னார் நகரப்பகுதியில் மன்னார் பொலிஸார் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்புத் தேடுதலின் போது நேற்று மாலை இந்தியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-குறித்த 4 பேரும் மன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்களில் இரண்டு ஆண்களும்,இரண்டு பெண்களும் அடங்கு கின்றனர்.இவர்கள் அணைவரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து ஒரு மாதம் எனவும்,மன்னாருக்கு வந்து நான்கு நாற்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த நான்கு பேரினதும் நடத்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்களின் காரணமாகவே குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த 4 பேரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வவுனியாவிற்கு வரும் நிலையில் மன்னாரில பொலிஸார் பாதுகாப்புக்காக பலப்படுத்தி தேடுதல்களை மேற்கொண்ட போது குறித்த 4 பேரூம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 இந்தியர்கள் பேர் மன்னாரில் கைது.
Reviewed by NEWMANNAR
on
August 17, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment