உலக அரங்கில் தமிழ் மொழியை ஏற்றிவைத்த ஒப்பற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளார்- அருட்திரு தமிழ் நேசன்.
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தமிழுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தமிழ்த்தாயின் தலைமகன். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை நனவாக்கியவர்.தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளார்-நினைவுப் பேருரை நிகழ்வில் அருட்திரு தமிழ் நேசன் தெரிவித்துள்ளார்
உலக அரங்கில் நமது தமிழ் மொழியை ஏற்றிவைத்த ஒப்பற்ற தமிழ் அறிஞர். அவருடைய தமிழ்த்தொண்டு காலத்தால் அழியாதது என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக் கிழமை (02.08.2012) மாலை 2.30 மணிக்கு மன்னார் நகரமண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை 2012 நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்துள்ளள்
அங்கு அவர் மேலும் கூறியதாவது
இன்றுபோல் தொடர்பாடல் வசதிகள் அதிகம் இல்லாத 50களில் 60களில் தனி ஒரு ஆளாக நின்று அவர் ஆற்றிய தமிழ்த்தொண்டு நம்மை மலைக்க வைக்கின்றது.அவருடைய தனிப்பட்ட ஆய்வு முயற்சிகள் அவருடைய சொற்பொழிவுகள் அவர் நடத்திய 'தமிழ்ப் பண்பாடு' என்ற ஆங்கில ஆய்விதழ் அவர் உருவாக்கிய உலகத் தமிழாய்வு மன்றம் அவர் வித்திட்ட உலகத்தமிழராய்ச்சி மாநாடுகள் தமிழ் மொழியின் சிறப்பை வெளிநாட்டவர்களுக்கு எடுத்துக்கூட அவர் மேற்கொண்ட தமிழ்த்தூதுப் பயணங்கள் என அவருடைய தமிழ்த்தொண்டு பரந்துவிரிந்தது.
உலக வரைபடத்தில் தமிழ் மொழியை பொறித்தவர் தனிநாயகம் அடிகளார்' என்றும் 'கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தனிநாயகம் அடிகளாரைப்போல் தமிழ் பணி ஆற்றியவர்கள் யாரும் இல்லை' எனவும் அடிகளாரைக் குறித்து அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளமை மிகையான வார்த்தைகள் அல்ல.
அடுத்த ஆண்டு (02.08.2012 – 02.08.2013) அன்னாரின் நூறற்றாண்டு விழாவை பெருவிழாவாக தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடவுள்ளது. இந்நூற்றாண்டுப் பெருவிழாவுக்கு ஆயத்தமாக இன்று அவருடைய 99வது பிறந்தநாளில் அடிகளாரின் நினைவுப் பேருரை நிகழ்வை நாம் நடாத்துகின்றோம். அத்தோடு இன்றைய நாளில் சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கின்றோம்.
மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் ஏற்பாட்டில் தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை நிகழ்வு மன்னாரில் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு இந்நிகழ்வுப் பேருரையை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வுக்கு மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முன்னிலை வகித்தார்.

Reviewed by NEWMANNAR
on
August 04, 2012
Rating:
No comments:
Post a Comment