அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்.. ஆச்சார்ய-- அபிஷேகம்.

மன்னார்,பேசாலையில் நிகழ்ந்தேறிய இந்த பக்தி வைபவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்து மகிழ்ந்தனர்.

மன்னார் இந்து சமூகத்தின் வந்தனைக்குறிய பிரம்மஸ்ரீ தர்மகுமார சர்மா அவர்கள் ஆச்சார்ய அபிஷேகம் செய்யப்பட்டு, குருக்கள் நிலைக்கு உயர்வடைந்தார். கடந்த 15.07.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இப்புனித ஐதீக நிகழ்வு இடம்பெற்றது.


சிவஸ்ரீ மகாதேவ ஐயர்,ஸ்ரீ ராஜாம்பாள் தம்பதிகளின் புதல்வராகிய இவர் பேசாலை ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் பிரதம குருவாக திகழ்கிறார். அத்துடன் வங்காலைப்பாடு ஸ்ரீ முத்துமாரியம்மன், காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களிலும் விஷேட உற்சவங்களையும், கிருத்தியங்களையும் ஏற்று செவ்வனே நடத்தி வருபவராக இருக்கிறார்..

பிரம்மஸ்ரீ நிலையில், நேர்த்தியான ஐதீகக் கடமைகளைப் புரிந்து வந்த தனது தலமாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலேயே ஆச்சார்ய அபிஷேகம் பெற்று, சிவஸ்ரீயாக உயரும் பேறு பெற்றுள்ளார். தீட்சா குருவாக இருந்து சிவஸ்ரீ நா. நடராஜக்குருக்கள் அவர்கள் இவருக்கு நிர்வான தீட்சை செய்து அபிஷேக கைங்கர்யத்தை ஈடேற்றினார்.பெருமளவில், பக்தர்களும், பிரமுகர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த சமயாசார வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.

அனுட்டான நித்திய கருமங்களை சிரமேற்கொண்டு ஆலயக் கிரியைகளைப் புரிந்து, சிவஸ்ரீயாக உயர்ந்துள்ள ஸ்ரீ தர்மகுமார சர்மா அவர்கள் சுமூகத்திலும் ஈடுபாடு கொண்டு சிரமதானம், கல்வி, இலக்கியம், மொழிப்பற்று ஆகிய துறைகளிலும் தொண்டாற்றி வருவதால் மன்னார் மக்களின் பெருமதிப்பிற்கும், அன்புக்கும் உரியவராக விளங்கி வருகிறார்..

மன்னார்  இணையத்தளத்துக்காக- முத்து  
மன்னாரில்.. ஆச்சார்ய-- அபிஷேகம். Reviewed by NEWMANNAR on August 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.