அண்மைய செய்திகள்

recent
-

நுர்தீன் மசூர் அவர்கள் விட்டுச் சென்ற எருக்கலம்பிட்டி மக்களுக்கான பணியினை நான் செய்வேன்-அமைச்சர் றிஸாட்

எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சியினால் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளில் தடைகள் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் கொள்வதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்,துன்பப்படும் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ,இது எந்த இன மக்களாக இருந்தாலும் பரவாயில்லை அங்கு சென்று அவர்களுக்கு உதவுவதையே எனது பணியாக கொண்டுள்ளேன் என்று கூறினார்.



மன்னார் எருக்கலம்பிட்டியில் 9 கோடி 50 இலட்சம் ரூபா செலவில் மேற் கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்தி பணிகளின் முதற்கட்டமாக இரண்டு கிலோ மீட்டர் எருக்கலம்பிட்டி பிரதான பாதையின் புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் அமைச்சர் அங்கு பேசுகையில் கூறியதாவது –


அன்று அமைச்சராக இருந்து இறையடியெய்தியுள்ள மர்ஹூம் நுர்தீன் மசூர் அவர்கள் விட்டுச் சென்ற எருக்கலம்பிட்டி மக்களுக்கான பணியினை நான் செய்வேன்.எமக்குள் ஆயிரம் கருத்த வேறுபாடுகள் இருக்கலாம்.அவைகளை நாம் பேசி தீர்த்துக் கொள்ள முடியும்,கடந்த தேர்தலில் எம்மை தோற்றகடிக்க வேண்டும் என்று அரசியலுக்கு அப்பால் இனவாதம் தலை துக்கி நின்ற போதும்,அல்லாஹ் எமக்கு இந்த அமானிதத்தை தந்து மேலும் பணியாற்றும் தைரியத்தையும்,உதவியினையும் தந்துள்ளான்.


நான் பெற்றுக் கொண்ட அமைச்சுக்கள் மூலம் சகல சமூகங்களும் நன்மையடையும் வகையில் நேர்மையாக பணியாற்றியுள்ளேன்.காய்க்கின்ற மரத்துக்குத் தான் கல்லடிகளும் பொல்லடிகளும் என்று கூறும் பழமொழிக் கொப்ப என்னால் முன்னெடுக்ப்படும் மக்கள் நலன் திட்டங்களை இனவாத ரீதியில் காண்பித்து அதில் குளிர்காய பல தீய சக்திகள் எதிர்பார்க்கின்றன.நான் இனவாதியாக இருந்திருந்தால் மெனிக் பார்ம் நலன் புரி முகாமில் இருந்த தமிழ் மக்களில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்தியிருக்க முடியுமா?.இருப்பினும் இன்னும்முஸ்லிம்களை மழுமையாக குடியமர்த்த முடியாத நிலை உள்ளத.அதனை செய்கின்ற போது பல எதிர்ப்புக்கள் எழுகின்றது.தாம் வாழந்த மண்ணில் எவராக இருந்தாலும் அவர்கள் வாழ்வதற்கு பூரண உரிமையுண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்களது வாழ்வாதார மேபாட்டுத் திட்டங்களை நேர்மையாக செய்கின்ற எமக்கு எதிராக பல சதிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் எனது அரசியல் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி விடவும் முயற்சிகள் இடம் பெறுகின்றது என்று தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாட்டில் சகலரும் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக செயற்படுவதாகவும் கூறினார்.

 மன்னார் நகர நிருபர்
நுர்தீன் மசூர் அவர்கள் விட்டுச் சென்ற எருக்கலம்பிட்டி மக்களுக்கான பணியினை நான் செய்வேன்-அமைச்சர் றிஸாட் Reviewed by NEWMANNAR on August 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.