மன்னார் மாவட்டத்தில் ஏறபட்டுள்ள கடும் வரட்சியினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க கோரிக்கை.

இந்த நிலையில் வரட்சியால் பாதீப்படைந்துள்ள மாவட்டங்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்படும் உதவிகளை மன்னார் மாவட்ட மக்களுக்கும் வழங்கும் படி பாதீக்கப்பட்ட மக்கள் தன்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி முகமட் றியாஸ் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது நிலவி வரும் கடும் வரட்சியின் காரணமாக விவசாயங்கள் எல்லாம் பாதீப்படையும் நிலைக்கு வந்துள்ளது. அத்துடன் அதிகமான கிராமங்களில் குடி நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
-மன்னாரின் பிரதான குளமான கட்டுக்கரை குளம் உற்பட 162 குளங்களில் நீரின்றி வெறிச் சோடிக்காணப்படுகின்றது.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயமும் முற்றாக பாதீப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
-இதே வேளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும்,பொருளாதார அபிவிருத்தி அமைச்சும்,விவசாய திணைக்களமும் இணைந்து மக்களுக்கு குடி நீரினை வழங்குவதற்காண நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
அத்துடன் 60 முதல் 70 நாற்களுக்குள் அறுவடை செய்யவிருக்கும் நெற்பயிரை பாதுகாக்க நிர்மாணிக்கப்பட்டிருக்கும் குழாய் கிணறுகாளை துப்பரவு செய்து தரும்படியும்,நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்கும்படியும் பாதீக்கப்பட்ட விவசாயிகள் அவசர வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
-மன்னார் பிரதான குளமான கட்டுக்கரை குளத்தில் நீர் வற்றியுள்ளதால் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் 750 மீனவ குடும்பங்கள் பாதீப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
-எனவே மன்னாரிலும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளமையினால் பாதீப்படைந்து வரும் மாவட்டங்களுக்கு ஜனாதிபதியினால் விசேட உதவிகள் வழஙகப்பட்டு வருவது போன்று மன்னார் மாவட்டத்திலும் பாதீக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என மக்கள் தம்மிடம் வேண்டு கோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி முகமட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் ஏறபட்டுள்ள கடும் வரட்சியினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
August 23, 2012
Rating:

No comments:
Post a Comment