தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் மீனவர்கள்
இந்திய இழுவைப்படகு மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகையால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பான விசேடக்கூட்டம் கடந்த சனிக்கிழமை(4-08-2012) காலை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசக்கட்டிடத்தில் தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் திட்ட இணைப்பாளர் ஏ.சுனேஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் தலைமை செயலக இணைப்பாளர் ஜேசுதாசன் உற்பட மீனவ கிராமங்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றிய மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் இணைப்பாளர் ஏ.சுனேஸ் தெரிவிக்கையில்.
தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையானது சிறு மீனவர்களின் உரிமை இழுவை படகுகளின் வருகை மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகை என்பவற்றை நிறுத்துவதற்கு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
-இருந்த போதிலும் இதற்காண சரியான தீர்வு இன்னமும் எமது மீனவ சமூகத்திற்கு கிடைக்கவில்லை.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மாதம் 13 ஆம் திகதி துறை சார் நிபுனர்களுடன் கலந்துறையாடல் ஒன்றை நடாத்தினோம்.
இதன் அடிப்படையில் தற்போது கிராம மட்ட மினவர்களுடன் விசேட கலந்துறையாடல் ஒன்றை நடாத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இதே வேளை மன்னார் மாவட்ட மீனவர்கள் தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறி வருகை கடற்படையினரின் மீன் பிடி பாஸ் நடைமுறை தென் பகுதி மீனவர்களின் வருகை கடல் வழங்களை மீனவர்களின் விருப்பத்திற்கு அமைவாக பிடிப்பதற்கு அனுமதி இல்லாமை தடை செய்யப்பட்ட மீனவ உபகரணங்களின் பாவனை மீனவ துறைமுகம் மற்றும் மீனவ நிலங்கள் அபகரிப்பு போன்ற காரணங்களினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் பாதீக்கப்பட்டு வருவதாக மீனவ பிரதி நிதிகள் அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளதாக தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் திட்ட இணைப்பாளர் ஏ.சுனேஸ் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் மீனவர்கள்
Reviewed by NEWMANNAR
on
August 07, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment