அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் டிக்கெட் கேட்ட கிளிநொச்சி இளைஞரை தள்ளி விழுத்தி படுகொலை செய்த பஸ் சாரதியும், நடத்துனரும் கைது

யாழ்.பஸ்ரியன் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்ற கிளிநொச்சி இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் பயணித்த பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வழி அனுமதிப்பத்திரம் இல்லா நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட டிக்கற் தொடர்பான தகராறினைத் தொடர்ந்து அதில் பயணித்த கிளிநொச்சி ஜெயபுரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவர் மரணமானார்.
அவரது இடுப்புப்பகுதியில் பலமான அடிபட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணை மற்றும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ளது.
 
இது பற்றி தெரியவருவதாவது 
 
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர - தெரிவிக்கையில்...

“கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்த பயணிகளும் இவ்விவகாரத்தில் தலையிடவே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பெரிதாவதை அறிந்த ஓட்டுநர் பஸ்ஸை சடுதியாக திருப்ப முனைகையில் தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞரொருவர் எகிறி விழுந்து பஸ் சில்லில் அகப்பட்டு மரணமாகியுள்ளார். பஸ் நடத்துனர், ஓட்டுநர் ஆகியோரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்...” என தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் டிக்கெட் கேட்ட கிளிநொச்சி இளைஞரை தள்ளி விழுத்தி படுகொலை செய்த பஸ் சாரதியும், நடத்துனரும் கைது Reviewed by NEWMANNAR on August 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.