மன்னாரில் கட்டாக்காலி தெரு நாய்களுக்கு விசர் நோய் ஏற்படும் நிலை
மன்னார் நகரில் கட்டாக்காலி மாடு ,நாய் மற்றும் கழுதைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதும் அவற்றின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததன் காரணமாக விபத்துக்களும் நகர சீர்கேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்களும்,சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
மன்;னார் நகரில் கட்டாக்காலி மாடுகள்,நாய் மற்றும் கழுதைகளும் பல்கிப்பெருகிய நிலையில் காணப்படுகின்றது.
தற்போது மன்னாhரில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்டாக்காலி கழுதைகள் வீதிகளில் கண்டபடி ஓடித்திரிகின்றது.
இதன் காரணமாக மன்னாரில் விபத்துக்கள் ஏற்படுவதோடு பல வாகணங்களும் கழுதையின் தாக்குதல்களினால் சேதமடைந்துள்ளது.
இதே வேளை கட்டாக்காலி தெரு நாய்களின் தொகை மன்னார் நகரில் அதிகரித்து வருகின்றது.
இவைகள் மக்களைத்தீண்டுவதோடு பொது இடங்கள்,வீதிகள் என்பவற்றை நாசப்படுத்துகின்றது.
-தற்போது கடும் வரட்சி மற்றும் வெயில் நிலவி வருகின்றமையினால் கட்டாக்காலி நாய்களுக்கு விசர் நோய் ஏற்படுவதற்காண காரணங்களும் உள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டு கோள் விடுக்கின்றனர்.
மன்னார் நகர நிருபர்

Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:

No comments:
Post a Comment