அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதியில் பொது வாகன தரிப்பிடம் ஒன்றை அமைக்க கோரிக்கை.

மன்னார் நகர் பகுதியில் பொது வாகன தரிப்பிடம் ஒன்று இல்லாததன் காரணத்தினால் வாகன உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வர்த்தக நோக்குடனும் ,சுற்றுலாப்பயணிகளா கவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி மன்னாரைச் சேர்ந்த மக்களும் தமது தேவைகளுக்காக பஸார் பகுதி உள்ளிட்ட ஏனைய இடங்களுக்குச் செல்கின்ற போது வாகனங்களை அப்பகுதிகளில் உள்ள வீதியோரங்களுக்கு அருகாமையிலும்,கடைகளுக்கு முன்பாகவும் விட்டுச் செல்கின்றனர்.

இதனால் வாகன  உரிமையாளர்களிடம் மன்னார் நகர சபை பணியாளர்கள் 50 ரூபாய் பணத்தை அறவீடு செய்கின்றனர்.

தனியாருடைய  வாகனங்கள் எங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் குறித்த தொகை பலவந்தமாக குறித்த பணியாளர்களிடம் அறவீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக முச்சக்கர வண்டிகள் பொருட்களை ஏற்றுவதற்கு கடைக்கு முன் நிறுத்தினால் கூட குறித்த 50 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த பணத்தை அறவீடு செய்யும் மன்னார்  மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பொது வாகன தரிப்பிடம் ஒன்றை அமைக்குமாறு வர்த்தகர்களும்,வாகன உரிமையாளர்களும்  வேண்டு கோள் விடுக்கின்றனர்.

(மன்னார்  நிருபர்)
---------------------------------------------
மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதியில் பொது வாகன தரிப்பிடம் ஒன்றை அமைக்க கோரிக்கை. Reviewed by NEWMANNAR on August 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.