வடிகாலின்றி அமைக்கப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகளினால் மழைக்காலங்களில் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கும் நிலை- படங்கள் இணைப்பு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயல் திட்டத்தின் கீழ ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் குறித்த கொங்கிரீட் வீதிகள் மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்றது.
பல மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கொங்கிரீட் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதி உயரம் கொண்ட வீதியாக குறித்த வீதிகள் பல அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீதிகளுக்கு அருகில் கழிவு நீர் வடிகான் எவையும் அமைக்கப்படவில்லை.மழை காலங்களில் வீடுகளில் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதிகள் மக்களின் வீட்டு நிலத்தை வீட வீதி உயரமாக காணப்படுகின்றது.
எதிர்வரும் மாதங்கள் மழைக்காலமாக உள்ளமையினால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தி திணைக்களம் இவ்விடையத்தில் தலையிட்டு கழிவு நீர் வடிகாணை உடன் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
இவ்விடையம் தொடர்பாக மன்னார் நகர சபை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும்,இவ்விடையம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வடிகாலின்றி அமைக்கப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகளினால் மழைக்காலங்களில் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கும் நிலை- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 10, 2012
Rating:

No comments:
Post a Comment