அண்மைய செய்திகள்

recent
-

தொடர் மின் வெட்டு-உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மின்தடங்கல் ஏற்படுவதனால் கா.பொ.த. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும்  மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.


நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டு வந்த மின் தடங்கல் தற்போது அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

இரவு,பகல் பாராது தற்போது மின் வெட்டு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இதனால் பரீட்சைக்குச் தோற்றும் மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மின்சார தடங்கல் தொடர்பில் மின்பாவனையாளர்கள் பல தடவை மின்சார சபைக்குத் தெரிவித்த போதும் மின்சார சபை அதிகாரிகள் அசமந்தப்போக்குடனேயே செயற்பட்டு வருவதாக மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல அரச உயர் அதிகாரிகள் உள்ள போதும் அவர்கள் இவ்விடயத்தில் இது வரை தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே உயர்தர பரீட்சை முடியும் வரை மன்னார் மாவட்டத்தில் மின் தடை செய்வதைக் குறைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின் வெட்டு-உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு Reviewed by NEWMANNAR on August 10, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.