அடிப்படை வசதியற்ற நிலையில் மீள் குடியேற்றப்பட்ட மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டு வருடங்களைக் கடக்கின்ற போதும் மன்னார் மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
-மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் குறித்த மாந்தை எள்ளுப்பிட்டி கிராமம் உள்ளது.
1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தின் போது குறித்த கிராமத்தில் இருந்த அனைத்துக்குடும்பங்களும் இடம் பெயர்ந்த நிலையில் வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர்.
இந்த மக்கள் இடம் பெயர்ந்து செல்வதற்கு முன் குறித்த கிராமத்தில் சுமார் 70 நிரந்தர வீடுகள் காணப்பட்டது.
இந்த மக்கள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் கடந்த 2010 ஆம் ஆண்டு தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
ஆந்த மக்கள் குடியேற்றம் செய்யப்பட்ட போது அக்கிராமத்தில் இருந்த அணைத்து வீடுகளும் உடைக்கப்பட்டு தறைமட்டமான நிலையில் காணப்பட்டது.
அந்த நிலையிலேயே குறித்த கிராமத்தைச் சேர்ந்த 106 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இதன் போது இந்த மக்களுக்கு தண்ணார்வத் தொண்டு அமைப்புக்கள்தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் குறிப்பிட்ட அளவு மலசல கூட வசதி போன்றவற்றை மேற்கொண்டது.தற்போது குறித்த கிராமத்தில் 40 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் அந்த மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டமையினால் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் அந்த மக்கள் அவர்களுடைய உறவினர்களுடைய வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அரச திணைக்களங்களின் அதிகாரிகளோஅல்லது அரசியல் வாதிகளோ குறித்த கிராமத்திற்கு வருவதில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது தொடர்ச்சியாக உள்ள 40 குடும்பங்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த கிராமத்தில் தற்போது நீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிப்பதற்கும் ஏணைய தேவைகளுக்கு பயண்படுத்துவதற்கும் நீர் இல்லாமையனால் அந்த மக்கள் சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள திருக்கேதிஸ்வரத்திற்குச் சென்று நீரைப்பெற்றுக்கொள்ளுகின்றனர்.
ஆனால் வாழ்வாதாரம் உள்ளிட்ட எந்த வித உதவிகளும் தற்போது கிடைப்பதில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயம் செய்வதற்கான நிலம் இருந்து கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் அந்த மக்கள் உள்ளனர்.
மன்னார் பிரதேச சபையிடம் தமது கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மீள் குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டு வருடங்களைக்கடக்கின்ற போதும் இது வரை நிரந்திரமான எவ்வித அபிவிருத்தித்திட்டங்களையும் எமது கிராமம் கண்டு கொள்ளவிலலை.

எனவே நிரந்தர வீட்டுத்திட்டம்இமின்சாரம்இகுடி நீர் போன்றவற்றை எமது கிராமத்திற்கு வழங்க உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அத்த மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதியற்ற நிலையில் மீள் குடியேற்றப்பட்ட மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள்.
Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:

No comments:
Post a Comment