கைதிகளின் படுகொலை வரிசையில் நிமலரூபன், டெல்றொக்சன் இவர்களுக்கு அடுத்தது யார்?- பா.உ சி.சிறீதரன்

இதன் மூலம் அரசாங்கம் தமிழர்களை இன்னமும் மனிதர்களாக கூட நினைக்கவில்லை என்பதையே உணரமுடிகின்றது. இந்த அரசாங்கம்தான் தமிழர்களுக்கொரு தீர்வினை பெற்றுத் தரும் என சர்வதேசம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கின்றது.
இன்றைய நிலையில் நாம் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக சர்வதேசத்திற்கு கூறிக்கொள்கின்றோம். மேற்கண்டவாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்திருக்கின்றார்.
டெல்றொக்சனின் உயிரிழப்பு தொடர்பாகவும், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு பொலிஸார் தொடர்ந்து இடையூறு விளைவிக்க எடுத்துக் கொண்ட முயற்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,
அதாவது டெல்றொக்சன் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவருக்கு முன்னர் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டார். நாளை, நாளை மறுதினம் யார்..? என்ற கேள்வியோடுதான் நாங்கள் ஒவ்வொரு நாளையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நாம் ஒருவரின் மரணத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் அந்த இளைஞனின் மரணத்தின் பின்னால் எங்கள் இனத்தின் உண்மையான நிலைவரம் உலகத்தின் மனசாட்சிக்கு காண்பிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் அதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றோம்.
நிமலரூபன், டெல்றொக்சன் இவர்கள் எங்கள் இனத்தின் நிலையை தங்கள் மரணத்தின் மூலம் காண்பித்திருக்கின்றார்கள். இந்த இளைஞர்களின் படுகொலைகளுக்கு நிச்சயமாக உலகம் பதில் சொல்லவேண்டும். அதற்கான காலம் நிச்சயமாக வரும், அதற்கான அந்த நோக்கத்திற்காக நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
யுத்தம் தீர்ந்து ஜனநாயகம் மலர்ந்துள்ள தேசத்தில் குரூரமாக படுகொலை செய்யப்பட்ட எங்கள் சொந்தங்களுக்காக எங்கள் உளமார்ந்த அனுதாபங்களை நாங்கள் கூறிக்கொள்கின் றோம்.
அவர்களுடைய தியாகங்கள் நிச்சயமாக ஒருநாள் அர்த்தமுள்ளதாக்கப்படும், இதற்கான அனைத்து தமிழர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்று திரளவேண்டும் என்றார்.
கைதிகளின் படுகொலை வரிசையில் நிமலரூபன், டெல்றொக்சன் இவர்களுக்கு அடுத்தது யார்?- பா.உ சி.சிறீதரன்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2012
Rating:

No comments:
Post a Comment