மன்னாரில் சுத்திகரிப்பு பணிகள் தாமதம் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்
மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணி ஒழுங்காண முறையில் இடம் பெறாததன் காரணத்தினால் குறித்த பணியினை தனியாருக்கு வழங்குவது குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் தமது பணியை திறம்பட செய்யவில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நகர சபையில் இடம் பெற்ற போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்களின் பணி திருப்தியில்லாததன் காரணத்தினால் சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவுகளின் பிரகாரம் சுத்திகரிப்பு பணியினை தனியாருக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
எனினும் குறித்த செயற்பாடுகள் இடம் பெறவில்லை.சுத்திகரிப்பு பணியாளர்கலோ மிகவும் அசமந்தப்போக்குடனே நடந்து கொள்ளுகின்றனர்.
மன்னார் நகர சபை பல்வேறு வேலைத்திட்டங்களை நீதிமன்றத்தினை அனுகியே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நீண்டகாலமாக மன்னார் நீதிமன்றம் இயங்காத நிலையில் உள்ளதால் மன்னார் நகர சபை பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் சுத்திகரிப்பு பணிகள் தாமதம் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
August 28, 2012
Rating:

No comments:
Post a Comment