எமது நகர சபைக்கு உள்ள அதிகாரங்கள் திட்டம் வகுத்து முடக்கப்பட்டுள்ளதை நாம் யாவரும் அறிவோம்
எமது நகர சபைக்கு உள்ள அதிகாரங்கள் திட்டம் வகுத்து முடக்கப்பட்டுள்ளதை நாம் யாவரும் அறிவோம்.அதன் வெளிப்பாடே மக்கள் எம் உறுப்பினர்கள் மீதும் சபையின் மீதும் வெறுப்புக்கொள்ள காரணமாக உள்ளது.சபையில் என்னதான் தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் செயற்பாட்டின் முன் நகர்வை காணமுடியாதுள்ளதாகவும் மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையில் இடம் பெற்ற மாதாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உறையாற்றுகையில்,,,,
தொடர்ந்து இடம் பெற்று வரும் பிரச்சினைகளுக்கு மீண்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதோடு எமது நகர சபைக்கு உற்பட்ட நிலங்கள் பறிபோவது தொடர்பான தீர்மானத்தை இச்சபையில் முன்வைக்கின்றேன்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இருதிக்கட்டத்தின் போது மக்கள் இடம் பெயர்ந்து தமது உயிரை பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கையில் மக்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்த்து விட்டு நில அபகரிப்பிற்கான வியூகங்களை வகுத்து அரசின் கடும் போக்காளர்கள் செயற்பட்டனர்.
அப்போது சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க அவர்கள் பறவைகள்,வன ஜீவராசிகள் சரணாலயங்கள் பாதுகாப்பதற்கும் அதற்காண எல்லைகளை நிர்ணயிப்பதற்குமான ஓர் சுற்று நிறுபத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றினார்.
-அதன் அடிப்படையில் வடக்கின் பல பகுதிகளிலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அதில் மன்னார் நகரமும் உள்ளடங்கும்.
மன்னாரில் மக்கள் குடியிறுப்பு பகுதிகலான வங்காலை,சிறுநாவற்குளம்,தள்ளாடி ,திருக்கேதீஸ்வரம்,மன்னார் நகரப்பகுதிகளான பள்ளிமுனை,சவுத்பார் (ஸ்ரேசன்) மன்னார் நகரின் பிரதான நுளைவாயில் போன்றவை உள்ளடக்கிய இடங்கள் சரணாலயங்களாக பிரகடணப்படுத்தப்பட்டு பெயர்ப்பலகையும் போடப்பட்டுள்ளன.குறிப்பாக மன்னார் நகரசபைக்குச் சொந்தமான பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
-எமது நாட்டில் வேறு எங்காவது நகர்ப்பகுதிகளில் வண ஜீவராசிகள் சரணாலயங்கள் உள்ளதா? ஏன்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்க விரும்புவதோடு மக்களின் தேவைப்பாடான இடங்களை மீள் பரிசீலினைக்கு உற்படுத்த வலியுருத்துவதோடு இவ்விடையம் தொடர்பாக கடந்த 17-08-2012 அன்று கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் வவுனியாவில் இடம் பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவர் கலந்து கொண்டிருந்த போது மன்னார் பிரதான நுளைவாயிலில் உள்ள காணி பற்றி நகர சபை தலைவர் கேட்ட போது அதற்கு ஜனாதிபதி குறித்த காணி நகரசபைக்குச் சொந்தமானது என பதிலளித்ததாக நகர பிதா கூறினார்.
இதே வேளை தற்போது மட்டக்களப்புகாத்தான் குடி பாரிய அபிவிருத்தியில் காணப்படுகின்றது.
ஆனால் காத்தான் குடியைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலர் எமது மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வாரந்த சந்தைக்கட்டிடத்தை ஆக்கிரமித்து அதில் தினச்சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் மன்னார் மக்களும்,மன்னார் வர்த்தகர்களும் நகர சபை மீது வெறுப்புடன் செயற்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல தமிழ்,முஸ்ஸிம் வர்த்தகர்கள் வியாபார நிலையங்களை அமைக்க இடம் இன்றி நடைபாதை வியாபாரிகளாக அல்லல்படுகின்றனர்.எனவே மன்னார் நகரசபையின் தலைவர்,செயலாளர் உப தலைவர் ,உறுப்பினர்கள் இவ்விடையத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
நகர நிருபர்
நகர நிருபர்
எமது நகர சபைக்கு உள்ள அதிகாரங்கள் திட்டம் வகுத்து முடக்கப்பட்டுள்ளதை நாம் யாவரும் அறிவோம்
Reviewed by NEWMANNAR
on
August 29, 2012
Rating:

No comments:
Post a Comment