மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலரின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு.

மன்னார் அரச தனியார் பேருந்து தரிப்பிடங்களினுள் முச்சக்கர வண்டிகள் உள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனால் நீண்ட நாட்களாக எவ்வித பிரச்சினைகளும் இன்றி அரச தனியார் பேரூந்து தரிப்பிடங்களில் செயற்பாடுகள் இடம் பெற்று வந்தது.
தற்போது பிரச்சினைகளிலும்,வன்முறைகளிலு ம் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையிலும்,தலைமறைவாகியுள்ள நிலையிலும் மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலும் ஏனைய பகுதிகளிலும் எவ்வித பிரச்சினைகளும் இன்றி செயற்பாடுகள் இடம் பெற்று வந்தது.
தற்போது மீண்டும் ஒரு சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அரச பேரூந்து தரிப்பிடத்தினுள் அத்து மீறி நுளைந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலரின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 31, 2012
Rating:

No comments:
Post a Comment