தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை 2012 நிகழ்வும் நூற்றாண்டு விழா ஆரம்ப வைபவமும்-(2ம் இணைப்பு-பட இணைப்பு)
இந்நிகழ்வுக்கு கலையருவியின் இயக்குனரும் மன்னார் சர்வமதப் பேரபையின் தலைவருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமை வகித்தார். மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முன்னிலை வகித்தார்.தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபரும், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வழங்கினார். 'தமிழ் மொழியின் எதிர்காலம்' என்ற தலைப்பில் இந்நினைவுப் பேருரை இடம்பெற்றது.
மன்ஃ புனித சவேரியார் பெண்கள் பாடசாலை மாணவியர் இறைவணக்கம் நிகழ்த்தினர். இந்நிகழ்வின் வரவேற்புரையை மன்ஃ சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. ஜ. தயானந்தராஜா அவர்கள் நிகழ்த்தினார். மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்கள் தனிநாயகம் அடிகளாரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றினார்.
இந்நிகழ்வில் மன்னார் தழல் இலக்கிய வட்டத்தின் கவியரங்கமும், மன்ஃ புனித சவேரியார் பெண்கள் பாடசாலை மாணவியரின் நடனமும், மன்ஃ சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவிகளின் நடனமும் சிறப்பு நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.
மன்னார் ஆயர் அவர்கள் திரு. ஆறுதிருமுருகனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தமிழ் நேசன் அடிகளார் நினைவுச் சின்னம் வழங்கினார். வைத்தியர் திரு. கதிர்காமநாதனும், வைத்தியர் திரு. அழகக்கோன் அவர்களும் திரு. ஆறுதிருமுருகன் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தினர்.
மடு கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி நா. வல்லிபுரம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். கலையருவியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. அந்தோனிதாசன் பெனாண்டோ நிகழ்;ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை 2012 நிகழ்வும் நூற்றாண்டு விழா ஆரம்ப வைபவமும்-(2ம் இணைப்பு-பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
August 06, 2012
Rating:
No comments:
Post a Comment