மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம்-சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. படங்கள் இணைப்பு,
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் மன்னார் நீதிவானுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை மேலதிக நீதவான் ஆர்.திஸாநாயக்க முன்னிலையில் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் கிராம மக்கள் மன்னார் நீதிமன்றப்பகுதிக்கு முன் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றம் மீது கற்களினால் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டது.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இது வரை கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை குறித்த சம்பவத்தை தொடர்ந்து மன்னார் நீதவான் ஏ.யூட்சன் அவர்களுக்கு அமைச்சர் றிஸாட் பதீயுதீன் தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் மீது கற்களினால் வீசி தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் தற்போது கைதாகிய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 43 பேருடைய வழக்கு வசாரணைகளும்,மன்னார் நீதவானுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளும் இன்று திங்கட்கிழமை 24 ஆம் திகதி மன்னார் நீதி மன்றத்தில் இடம் பெற்றது. இதன் போது கைது செய்யப்பட்ட 43 சந்தேக நபர்களும் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த வழக்கு தொடர்பில் வாதி ,பிரதிவாதங்கள் இடம் பெற்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதவான் ஆர்.திஸானாயக்க குறித்த 43 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதே வேளை மன்னார் நீதிவானுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை மேலதிக நீதவான் ஆர்.திஸாநாயக்க முன்னிலையில் இடம் பெற்ற போது அமைச்சர் றிஸாட் பதீயுதின் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை.இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரனையினை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இதே வேளை அமைச்சர் றிஸாட் பதீயுதீனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை அவதானிக்கும் பொருட்டு ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தனது பிரதி நிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.மேற்கு அவுஸ்திரேலியா சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான மார்க் டிரவல் என்பவர் மன்னார் வந்த நிலையில் அவர் மன்னார் நீதிமன்றத்திற்குச் சென்று குறித்த வழக்கு விசாரணைகளை அவதானித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர நிருபர்

Reviewed by NEWMANNAR
on
September 24, 2012
Rating:
No comments:
Post a Comment