கனவைக் கலைக்காதே.!- கவிதை
கனவுகளுக்குள்
சிக்கித்தவித்து
வெளியே வர
முயல்கின்றேன்
மறுபடியும்
ஒரு ''கனவு''.............
என் கண்முன்னே
என் நண்பர்கள்
கூடி நிற்கிறார்கள்
அவர்கள் ஏதோ ஒன்றை
தேடுகிறார்கள்............
அவர்களின்
பேச்சிலிருந்து
புரிந்து கொண்டேன்
இழந்தவற்றை
தேடுகிறார்கள் போல்............
எனக்கோ
மனசுக்குள்
சிரிப்பும்,வேதனையும்
எப்படிக்கிடைக்கும்
இவையெல்லாம் இனி?.........
நேற்று
நடந்தது போலே
எல்லாமே இருக்கிறது -ஆனால்
எனக்கும் இப்ப
நாற்பத்தைந்து வயதாச்சு!.............
அவர்கள்
இன்னும் பேசிக்
கொண்டிருக்கிறார்கள்
எனக்கென்றால்
ஒன்றும் புரியவில்லை..............
திடீரென
ஒரு மயான அமைதி
யாருடைய சத்தத்தையும்
காணவில்லை
அவர்களை தேட
ஆரம்பித்தேன்.......
யாரும்
கண்ணுக்கெட்டுவதாக
தெரியவில்லை
மனசெல்லாம் ஏதோ ஒரு
படபடப்பு....................
அவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
மறுபடியும் அதே பேச்சு
என்னைப்பார்கிறார்கள்
என்னைப்பற்றி
ஏதோ பேசுகிறார்கள்................. .......
எப்படி
இருக்கிறாய்
என்கிறார்கள்
எனக்கென்ன நான்
நல்லா இருக்கிறேன்
என்கிறேன்..................... ............
சுதந்திரமாக
சந்தோசமாக
இருக்கிறாயா?
என்று கேட்கிறார்கள் .......
ம் என்று
சொல்ல சொல்ல
எத்தனிக்கிறேன்
என் கனவைக்
கலைத்து யாரோ-என்னை
கைது செய்கிறார்கள்?
-வனிதாச்சந்துரு-
வங்காலை
கனவைக் கலைக்காதே.!- கவிதை
Reviewed by NEWMANNAR
on
September 28, 2012
Rating:

No comments:
Post a Comment