மன்னாரில் இருந்து பல நூற்றுக்கணக்கான பொலிஸார் கிழக்கு மாகணத்திற்கு
கிழக்குமாகாண சபை தேர்தலையோட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக மன்னாரில் இருந்து பல நூற்றுக்கணக்கான பொலிஸார் கிழக்கு மாகணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான சுமார் 10 இற்கும் மேற்பட்ட பேரூந்துகளில் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் மன்னாரில் போக்குவரத்துச் சேவைக்காக அரச பேரூந்துகள் பற்றாக்குறையாக உள்ளதுடன்
உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு உள்ளூர் சேவைகள் பல இடைநிறுத்தப்பட்டுள்ளது.
-இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் திணைக்களங்களின் பணியாளர்களும் உரிய நேரத்திற்கு தமது இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
எனினும் தனியார் பேரூந்துகள் தமது உள்ளளூர் சேவையினை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை மட்டுமே மேற் கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து பல நூற்றுக்கணக்கான பொலிஸார் கிழக்கு மாகணத்திற்கு
Reviewed by NEWMANNAR
on
September 07, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment