மன்னாரில் மதுபானச்சாலையை அகற்றக்கோரி எதிர்ப்பு பேரணி-படங்கள் இணைப்பு,
மன்னார் பனங்கட்டுக்கொட்டுப் பகுதியில் அமைந்துள்ள மதுபானச் சாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி பனங்கட்டுக்கோட்டு கிராம மக்கள் உற்பட அயல் கிராம மக்கள் அனைவரும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை அமைதியான கண்டனப்பேரணி ஒன்றை மேற்கொண்டு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
பணங்கட்டிக்கோட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கம் உற்பட அக்கிராமத்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்களும் இணைந்து குறித்த கண்டனப்பேரணியினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பணங்கட்டிக்கோட்டு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா திருச் சொரூபத்திற்கு அண்மையில் ஆரம்பமான குறித்த பேரணி வைத்தியசாலை வீதியூடாகச் சென்று மீண்டும் பணங்கட்டிக்கோட்டு கிராமத்தினுடாக பொலிஸ் நிலைய வீதியூடாக சென்றது. பின் பஸார் பகுதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது பின் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் பணங்கட்டிக்கோட்டு உதவி பங்குத்தந்தை அவர்களினால் மகஜர் கையளிக்கப்பட்டது.
பின் அங்கிருந்து பேரணி மன்னார் நகரசபைக்குச் சென்று மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களிடமும் குறித்த மகஜரின் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.குறித்த பேரணியின் போது மன்னார் பணங்கட்டுக்கோட்டு கிராமம் உற்பட அயல் கிராம மக்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மன்னார் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,மன்னார் சிறி சுவர்ணவிம்பாராமய தேரர் பன்னுவஸ் நுவர விமல ரத்தன தேரோ பாடசாலை மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
-அவர்கள் வழங்கி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,, எமது பகுதியல் அமைந்துள்ள மதுபானச் சாலையை இடம்மாற்றுவது தொடர்பாக---- மேற்படி விடயம் தொடர்பாக மன்னாரில் மிகவும் பழமை வாய்ந்ததும்,பாரம்பரியம் வாய்ந்ததும்,வறுமைக் கோட்டிற்குள் அதிக அளவு மக்கள் வாழ்வதுமான ஒரு மீனவ கிராமமாக இருப்பதோடும், பல்வகை தொழில் புரியும் மக்களும் கலந்து வாழ்வதும் இக்கிராமமான பனங்கட்டிக் கொட்டுகிராமத்திற்குரிய சிறப்பாக அமைவதோடு, இக்கிராமத்திலிருந்து உதயமான கிராமங்கள் பனங்கட்டிக் கொட்டுமேற்கு,எமில்நகர், இருதயபுரம், ஜீவபுரம்,சாந்திபுரம் என்பன அடங்குவதோடு, இவ் மதுபானச் சாலைகளால் பாதிக்கப்படும் அயல் கிராமமான புகையிரத நிலையம்,பெரியகடைகிராமமும் உள்ளடங்கலாகவே அமைந்திருப்பதனையும் இங்குசுட்டிக் காட்டுகின்றோம். எனவே ,இம்மதுபானச் சாலை அமைந்திருக்கின்ற பாதையானது பாடசாலை மாணவ,மாணவிகள், இளம் யுவதிகள்,திருமணமான தாய்மார்கள்,பன்சாலைக்கு செல்கிறவர்கள் அனைவருமே பயன்படுத்திவருகின்றனர். இவ்வேளைகளில் அப்பகுதியில் யுவதிகளும்,மாணவிகளும்,தாய்மார்களும் அனுபவித்தகொடுரங்கள்,அசௌகரியங்களை எழுதியோ ,சொல்லியோ விபரிக்கமுடியாது. எத்தனை சண்டைகள், வெட்டுக்குத்துக்கள், ஒரு இளம்பராயமான ஒருவருக்கு ஒரு கண்கூட இல்லாமல் போகுமளவிற்கு கொடுரமான சண்டை நடைபெற்றதையும் கோடிட்டுக்காட்டவிரும்புகின்றோம். அத்தோடு,கிராமத்தின் அருகில் இம் மதுபானச் சாலை அமைந்துள்ளமையால் தொழில் முடிந்து இம்மதுச்சாலை, கள்ளுத் தவறணைகளுக்கு சென்று உழைத்த காசுகள் அனைத்தையும் குடித்து தொலைத்து விட்டு பாடசாலையில் இருந்து வருகின்ற பெற்றபிள்ளைகளை பட்டினிபோடுகின்ற சம்பவங்கள் ஒன்றா, இரண்டா என்பதனை எம்மால் சுட்டிக்காட்டப்படுவதோடு, இளம் குடும்பத்தவர்கள் எத்தனைபேர் இக்குடி மூலம் காலையில் எழுந்தவுடன் கை விரல்கள் நடுங்குவதையும் எம்மால் சுட்டிக்காட்டமுடியும். ஆகவே,இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதை எமது கிராம பொது அமைப்புக்களாகிய நாம் இன்னும் பொறுமைகாக்கமுடியாது.
எனவே, இவ் தீமையளிக்கின்ற இந்த மது விற்பனைசாலைகள் அகற்றுவது அவசியமாகும் என்பதை வலியுறுத்துகிறோம். எனவே 30.09.2012 ற்குள் எமது கிராமபகுதியை விட்டு இடமாற்றப்பட வேண்டும்,நாம் 05.02.2012ல் பிரதேசசெயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அமைவாக 27.08.2012ல் நாம் அவ் இடத்தை மாற்றுவதாக ஒப்புதல் எழுத்து மூலம் தந்தும் இது வரைக்கும் வேறு இடத்திற்குமாற்றாததன் காரணம் என்ன? பிரதேச செயலாளரால் வழங்கப்படுகின்ற விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் 31.07.2012 உடன் முடிவடைந்தநிலையில் மதுபான விற்பனை எந்த அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது? மன்னாரில் ஆதிகிராமங்கள் என்ற வரிசையில் வரலாற்றுடன் கூடிய கிராமமாகிய இக்கிராமம் மட்டும் இன்னும் ஆதிகிராமமாக ஏனைய கிராமங்களுடனும்,புதிய உதய கிராமங்களுடன் ஒப்பிடும் போது இன்றுவரை அபிவிருத்தி யின்றி பின் தள்ளப்பட்டு இவ்வாறான சமூக சீரழிவிற்குரிய செயற்பாடுகளுக்கு மட்டும் இடமளிப்பதும் ஏன்? மன்னாரில் நடை பெறுகின்ற குற்றச் செயல்களில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்களேஅதிகமாக காணப்படுவதற்கு காரணமும் இம் மதுச்சாலைகள் இப்பகுதியிலுள்ளமையே என எமது பொது அமைப்புக்களால் இனம் காணப்பட்டுள்ளதையும் இங்குசுட்டிக்காட்டவிரும்புகின்றோம். ஆகவே, எமது அனைத்து கிராமமக்களின் கோரிக்கைகளை ஏற்று எம்மால் குறிக்கப்பட்டதிகதிக்குள் இவற்றை எமது கிராம பகுதியை விட்டு அகற்றித்தரும்படிதயவுடன் கேட்டுகொள்வதுடன். எமதுகோரிக்கைநிராகரிக்கபடுமானால் ஜனநாயகரீதியாகபோராடவேண்டிய சூழ்நிலைஏற்படும் எனவும் தயவுடன் அறியத்தருகின்றோம். எனவே, எம் மக்களை இத் தீய செயலிலிருந்து காப்பாற்றுவது எமது தலையாய கடமை என்பதனை தங்களுக்கு அறியத் தருகின்றோம்.
தங்களது துரித நடவடிக்கை எமதுகிராமத்துக்கும்,மாணவ,மாணவிகளுக்கும்,வறுமைகோட்டிற்குள் வாழும் மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டு மெனதயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
September 21, 2012
Rating:
1 comment:
மதுபானசாலைகட்கு கூட "மனிதாபிமான அடிப்படையில்" தாட்சணியம் காட்டும் தலைவர்கள் இருப்பது மன்னாரில் தான்,,,,,,,,,
Post a Comment