மன்னார் நகரப்பகுதிக்குள் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள் அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் உடனடியாக அகற்ற உத்தரவு.
மன்னார் பஸார் பகுதி உட்பட மன்னார் நகரப்பகுதிக்குள் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் உடனடியாக அகற்றுமாறு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் நடைபாதை வியாபாரிகளுக்கு பொதுவான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,,,
, மன்னார் பஸார் பகுதி உற்பட மன்னார் நகரப்பகுதிக்குள் அனுமதியற்ற முறையில்அமைக்கப்பட்டுள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். குறித்த அறிவித்தலை மீறி தொடர்ந்தும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நடைபாதை வியாபார நிலையங்கள் உடனடியாக மன்னார் நகர சபையினால் அகற்றப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு,குறித்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தனியார் வாகனங்கள் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றமையும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள கடையின் பெயர்ப்பலகைகள் மற்றும் விளம்பரப்பலகைகள் ஆகியவை தங்களின் கடை எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.
எல்லையை விட்டு வெளியில் இருக்கும் கடைத்தொகுதிகள் மற்றும் விளம்பரப்பலகைகள் மன்னார் நகர சபையால் உடன் அகற்றப்படும். -எனவே குறித்த அறிவித்தல்களுக்கு அமைவாக அனைத்து வியாபாரிகளையும் செயற்படுமாறு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் நகர நிருபர்
, மன்னார் பஸார் பகுதி உற்பட மன்னார் நகரப்பகுதிக்குள் அனுமதியற்ற முறையில்அமைக்கப்பட்டுள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். குறித்த அறிவித்தலை மீறி தொடர்ந்தும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நடைபாதை வியாபார நிலையங்கள் உடனடியாக மன்னார் நகர சபையினால் அகற்றப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு,குறித்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தனியார் வாகனங்கள் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றமையும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள கடையின் பெயர்ப்பலகைகள் மற்றும் விளம்பரப்பலகைகள் ஆகியவை தங்களின் கடை எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.
எல்லையை விட்டு வெளியில் இருக்கும் கடைத்தொகுதிகள் மற்றும் விளம்பரப்பலகைகள் மன்னார் நகர சபையால் உடன் அகற்றப்படும். -எனவே குறித்த அறிவித்தல்களுக்கு அமைவாக அனைத்து வியாபாரிகளையும் செயற்படுமாறு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் நகர நிருபர்
மன்னார் நகரப்பகுதிக்குள் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள் அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் உடனடியாக அகற்ற உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
September 20, 2012
Rating:

No comments:
Post a Comment