அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவரும் உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை.

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்குகின்ற அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜீ.குனசீலன் தெரிவித்தார்.


 மன்னாரில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிவரும் உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பிலும் அவர்களின் நடவடிக்கை தொடர்பாகவும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜீ.குனசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், 'மன்னார் எரிக்கலம் பிட்டி கிராமத்தில் கடந்த வாரம் தீடிர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டு வந்த மன்னார் பொது சுகாதார பரிசோதகர் குழு அங்குள்ள சகல விதமான வர்த்தக நிலையங்களையும் பரிசோதனை செய்தது.

 இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த 5 உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு குறித்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

 தற்போது மன்னார் பொது சுகாதார பரிசோதகர் குழு மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், சிறுவர் இல்லங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

 குறித்த சோதனையின் போது அரச திணைக்களம் ஒன்றில் டெங்கு பரவுவதற்காண சாத்தியக்கூறுகள் காணப்பட்ட நிலையில் குறித்த திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்காண நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

 பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எமது நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜீ.குனசீலன் மேலும் தெரிவித்தார்.

 மன்னார் நகர நிருபர், 
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவரும் உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை. Reviewed by NEWMANNAR on September 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.