மன்னாரில் 'டைனமோ' இல்லாத துவிச்சக்கர வண்டிகள் பறிமுதல்
மன்னாரில் டைனமோ இல்லாத துவிச்சக்கர வண்டிகளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதிப்போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மன்னார் 'சதோசா' விற்பனை நிலையத்திற்கு முன் நின்ற குறித்த வீதிப்போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் டைனமோ இல்லாத நிலையில் பயண்படுத்தப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
குறித்த துவிச்சக்கர வண்டிகளுக்கு புதிய டைனமோவை உடன் கொள்வனவு செய்தவர்களின் துவிச்சக்கர வண்டிகள் உடன் திருப்பி வழங்கப்பட்டது.
சுமார் 50 இற்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது மீட்கப்பட்ட அணைத்து துவிச்சக்கர வண்டிகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய டைனமோவை பெற்றுக்கொண்டு வந்து துவிச்சக்கர வண்டிகளை மீட்டுச் செல்லுமாறு வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மன்னார் பகுதியில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்த நிலையில் காணப்படுவதினால் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்றி துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் விபத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனை தடுப்பதற்காகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
September 12, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment